கோவை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் சாலை விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை.!!

சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் முறையான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும், சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது.

சந்தேகத்திற்கும் படி ஆட்டோவில் யாராவது ஏறினால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தல் வேண்டும் என்று கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...