காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்குப் போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சைக்கான வருகை பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல பகுதியில் சுகாதார பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் டாக்டர்.நஞ்சப்பா சாலையிலுள்ள நகர்நல மையம் மற்றும் கணபதியிலுள்ள நகர்நல மையம் ஆகியவற்றிற்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்குப் போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சைக்கான வருகை பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சமீபத்தில் மகப்பேறு நடைபெற்று, தற்போது வீட்டில் நலமுடன் உள்ள தாய்மார்களை கைப்பேசி மூலமாகத் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். மகப்பேறு தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி கிடைத்ததா என்றும், குழந்தைக்குப் போடப்படும் தடுப்பூசிகள் முறையாகப் போடுகிறார்களா, ஏதேனும் மருத்துவ உதவி தேவையெனில் இந்த தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள் என்றும், அரசு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை திருப்திகரமாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.26க்குட்பட்ட பீளமேடு பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நல்வாழ்வு மையம் கட்டடப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பணிகளைத் தரமானதாகவும், விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டுமெனச் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.