2-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள், தொழிற்சங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய ஊழியர்கள் தொழிற்சங்க அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.



கோவை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் 14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் சாலை மறியல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.



இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள், ஏஐடியூசி, அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.







Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...