கோவை மாவட்ட வனப்பகுதிகளில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை சிறுமுகை வனச்சரகம் பவானி நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 6-வயது மதிக்கத்தக்க பெண் யானைக் குட்டி இறந்த நிலையில் கண்டியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை அடர்வனப்பகுதி, மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் நேற்று ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது காப்புக்காட்டிலிருந்து சுமார் 60-மீ தொலைவில் உள்ள பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் சுமார் 6-வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து யானை உயிரிழப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால் நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர். மேலும் மாலை நேரத்தில் அடர் வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இன்று மாவட்ட வன அலுவலர், மற்றும்வனச்சரகர் தலைமையில் கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் மருத்துவ குழுவினர் பெண் யானைக்குட்டிக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.