மேலும், அவர்களிடம் இருந்து 6 சவரன் செயின்கள் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை இருகூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணி பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி.

இவர் கடந்த15ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில், இருகூர் அருகே சென்ற சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராசாத்தி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த தமிழ்ச்செல்வன், திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரை சங்க போலீசார் கைது செய்தனர்.
மேலும் விசாரனையில் இதே போல் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சவரன் நகைகளையும், செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.