கோவையில் வீட்டில் இருந்த இளம் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

மனநலம் பாதிப்பு ஏற்பட்டு குடும்பத்துடன் சிகிச்சைக்காக சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த நிலையில், மண்ணெண்னை ஊற்றிக் தற்கொலை.


கோவை: கோவை மாதம்பட்டியில் வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென உடலில் மண்ணெண்னை ஊற்றிக் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் மாதம்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூணன். இவரது மகன் சத்திய பிரியா (22). கார்மன்ஸ் டெக்னாலஜி படித்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக அடிக்கடி திடீரென மனநலம் பாதிப்பு ஏற்பட்டு சரியாகி வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சூலூர் பகுதிக்கு குடும்பத்துடன் சிகிச்சைக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். மாலை வீட்டில் இருந்த போது திடீரென சத்திய பிரியா வீட்டில் இருந்த பூஜை அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.

அப்போது, அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் சந்தேகமடைந்த அர்ஜூணன் நீண்ட நேரம் போராடி கடப்பாறை கொண்டு கதவை உடைத்துள்ளார்.



உள்ளே சென்று பார்த்த போது சத்திய பிரியா உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.



பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...