கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடமாடும் இலவச மருத்துவ சேவை துவக்கம்..!

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் ஐ.ஏ.எஸ்., இத்திட்டத்தினை கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.


கோவை: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடமாடும் இலவச மருத்துவ சேவை துவங்கப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நமது இந்தியத் திருநாட்டில் சமூக மற்றும் மக்கள் மேம்பாட்டிற்காக கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், பேரிடர் நிவாரணம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சேவையாற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ சேவையினை வழங்கிடும் வகையில் ‘நடமாடும் இலவச மருத்துவ சேவை (Mobile Clinic)’ திட்டத்தின் 'துவக்க விழா’ நேற்று (27-03-2022, ஞாயிறு) மாலை 5 மணியளவில் போத்தனூர் சாலையில் உள்ள PVG மஹாலில் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் துவக்கவுரை நிகழ்த்தினார். இதில் ஜமாஅத்தே இஸ்லாமி கோவை நகரில் மேற்கொண்டு வரும் பல்வேறு சேவைப் பணிகளுடன் நடைமுறைக்கு வரவிருக்கும் நடமாடும் இலவச மருத்துவ சேவையின் தேவையினை அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்ததாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ சிறப்புரை நிகழ்த்தினார். மக்கள் சேவையில் ஈடுபடுவது என்பது ஒவ்வொருவருக்கும் நிரந்தரமான நன்மைகளை ஈடித்தருவதுடன் இறைவனின் உவப்பையும் பெற்றுத் தருவதாக அமைந்திடும் எனக் குறிப்பிட்டார்.



கிராமப்புற எளிய மக்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தினை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., வாகனத்தின் சாவியை வழங்க ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ பெற்றுக்கொண்டார்.



தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமூக மேம்பாடு மற்றும் கட்டமைப்பிற்காக ஜமாஅத்தே இஸ்லாமி மேற்கொள்ளும் மக்கள் சேவைப் பணிகளை வெகுவாக பாராட்டினார்.

மேலும், கோவையின் வளர்ச்சிக்கு சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதன் அவசியத்தையும், அதற்கு இதுபோன்ற மக்கள் சேவைப் பணிகளில் அனைத்து தரப்பினரும் கரம் கோர்த்திட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ மற்றும் மாவட்டத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் வழங்கி கௌரவித்தனர்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., இத்திட்டத்தினை கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். இறுதியாக, தேசிய கீதம் முழங்கிட நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...