கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி நியமனம்..!

அதற்கான பணியாணையை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வழங்கினார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் குமார் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து புதிய துணை வேந்தரை பரிந்துரை செய்யும் வகையில், தேடுதல் குழுவினை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி முனைவர்.வி.குமரேசன், நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. இணையதளத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும், விண்ணப்பிக்க கடைசித் தேதி 2021 நவம்பர் 30 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 45க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து முதல்கட்டமாக 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி, தேடுதல் குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் நிர்வாக அனுபவம் மற்றும் பேராசிரியர் அனுபவம் ஆகியவை பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தேர்வு செய்யப்பட்டார்.



மேலும், அதற்கான பணியாணையை ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வழங்கினார்.

முனைவர் வி.கீதாலட்சுமி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் மேலாண்மைத் துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். விரைவில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...