ஈஷாவில்‌ ஐ.ஏ.எஸ்‌., ஐ.பி.எஸ்‌., அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு - பல்வேறு மாநில அதிகாரிகள்‌ பங்கேற்பு..!

மத்திய, மாநில அரசுகளில்‌ பணியாற்றும்‌ அரசு அதிகாரிகளுக்கான 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்பு மார்ச்‌ 21ம்‌ தேதி முதல்‌ மார்ச்‌ 25ம்‌ தேதி வரை நடைபெற்றது.


கோவை: மத்திய, மாநில அரசுகளில்‌ பணியாற்றும்‌ அரசு அதிகாரிகளுக்கான 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்பு மற்றும்‌ தலைமைப்‌ பண்பு மேம்பாட்டுப் பயிற்சி கோவை ஈஷா யோகா மையத்தில்‌ மார்ச்‌ 21ம்‌ தேதி முதல்‌ மார்ச்‌ 25ம்‌ தேதி வரை நடைபெற்றது.

இந்திய அரசுப் பணியாளர்‌ மற்றும்‌ பயிற்சித்‌ துறையுடன்‌ (DoPT - Department of personal and training) இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சி வகுப்பில்‌ பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த ஐ.ஏ.எஸ்‌, ஐ.பி.எஸ்‌, ஐ.எஃப்‌.எஸ்‌ அதிகாரிகள்‌ உட்பட 61 அரசு அதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.



அவர்களுக்கு 'ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா' என்ற சக்திவாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன்‌, உடல்‌ மற்றும்‌ மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோக பயிற்சிகளும்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசு அதிகாரிகள்‌ மன அழுத்தம்‌ நிறைந்த சூழ்நிலைகளை சரியாக கையாள்வது, உள்நிலையில்‌ அமைதியையும்‌ முழுமையையும்‌ உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில்‌ தெளிவு, உணர்ச்சியில்‌ சமநிலையை உருவாக்க முடிவெடுக்கும்‌ திறனை

மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின்‌ பிரதான நோக்கங்கள்‌ ஆகும்‌.

மேலும்‌, அவர்கள்‌ இவ்வகுப்பில்‌ கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன்‌ மூலம்‌ நீண்ட நாட்களாக அவர்கள்‌ சந்தித்து வரும்‌ உடல்‌ மற்றும்‌ மன ரீதியான பிரச்சனைகளில்‌ இருந்தும்‌ விடுபட முடியும்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...