கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - இளைஞர் படுகாயம்..!

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (27). இவர் நேற்று மாலை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருக்கும் நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மீண்டும் கோவில்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பொள்ளாச்சி-கோவை சாலையில் சரவணகுமார் வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த கார், சரவணக்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் தலை, கை போன்ற பகுதியில் காயமடைந்த சரவணகுமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சரவணகுமாரின் மனைவி ஜெயந்தி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...