கோவையில் உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் - நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை.!!

கருமத்தம்பட்டி அருகில் உள்ள கிராமத்தில் விளை நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களுக்கு நியாயமான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து, மின்கோபுரங்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கருமத்தம்பட்டி அருகே உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் உள்ள எலச்சிபாளையம் கிராமத்திலிருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் பகுதி வரை உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. உயர் மின் கோபுரங்கள் விவசாயிகள் நிலத்தில் செல்வதால் அவர்களுக்கு இழப்பீடு தருவதாக மின்சார வாரியம் விலை நிர்ணயத்தைச் செய்துள்ளது. ஆனால் இதுவரை இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், எலச்சிபாளையத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் புதிதாக உயர்மின் கோபுரத்தை அமைக்க மின்சார வாரியம் முடிவு செய்து போலீஸ் பாதுகாப்புடன் அமைக்க முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் வட்டாட்சியர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...