வால்பாறையில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்.!!

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பெட்ரோல் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து வால்பாறையில் தொழிற்சங்கங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நிறுத்தத்தால் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் அடையாளமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

வால்பாறையில் உள்ள திமுக தொழிற்சங்கம், தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக தொழிற்சங்கம் விடுதலை சிறுத்தை தொழிற்சங்கம் மதிமுக தொழிற்சங்கம் போன்றவைகள் இணைந்து சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் காந்திசிலை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்துச் சென்றனர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்தில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த பெட்ரோல் டீசல் விலை குறைக்க இவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதில் இன்று நான்கு பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் வால்பாறையில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...