பொது வேலை நிறுத்தம்: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது.!!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், மக்கள் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்று தொடங்கியுள்ளது.

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

தொழிலாளி வர்க்கம் நான்கு தலைமுறையாய் போராடி அளப்பரிய தியாகங்களைச் செய்து இன்னுயிர் ஈந்து போராடிப் பெற்ற சட்ட உரிமைகளைப் பறித்து விட்ட மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர் உரிமைகளைப் பறித்து பொதுத்துறையைச் சீரழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், மக்கள் விவசாயிகள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

LPF தொழிற்சங்கம் சார்பில் G. முருகேசன் M.மருதாசலம், INTUC சார்பில் D சிரஞ்சீவி கண்ணன், M.குணசேகரன் AITUC, K.R. தங்கராஸ், G.P சக்திவேல், CITU தொழிற்சங்கம் V.P இளங்கோவன், M.பஞ்சலிங்கம், HMS G.சித்ரா உள்பட 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...