கடந்த வாரம் முழுவதும் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்காமல் 'Grid Curtailment' தமிழக அரசு நடவடிக்கை: காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வரவேற்பு

கடந்த வாரம் முழுவதும் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்காமல் 'Grid Curtailment' தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மின் உற்பத்தியாளர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


கோவை: காற்றாலை சீசன் மார்ச் 15-ல் துவங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் முழுவதும் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்காமல் 'Grid Curtailment' மொத்த மின் உற்பத்தியும் மின்வாரியம் எடுத்துக்கொண்டது.

அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(Renewable Energy) உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில்,காற்றாலை மின் உற்பத்தி பிரிவில் 8,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உதவும் வகையில் கட்டமைப்பு வசதி உள்ளது.

இவ்வாண்டுக்கான காற்றாலை மின் உற்பத்தி சீசன் மார்ச் 15-ல் துவங்கியது. ஆண்டுதோறும் காற்றாலை சீசனில் மின் உற்பத்தி செய்யப்படும்போது சில நாட்கள் அரசு மின் உற்பத்தியை நிறுத்திவைக்க அறிவுறுத்தும்(Grid Curtailment). இதனால் அதிக மின் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் ஆற்றல் வீணடிக்கப்படும்.

காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சார்பில் தமிழகத்தில் 'Grid Curtailment' தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் கடந்த வாரம் முழுவதும் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்காமல் 'Grid Curtailment' தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மின் உற்பத்தியாளர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:-



சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மனிதர்களுக்கு மட்டுமின்றி எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காத உன்னதத் தன்மையை கொண்டுள்ளது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை(RenewableEnergy).

இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் காற்றாலை சீசனில் 'Grid Curtailment' ஒரு சில நாட்களில் இருக்கும். இதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கோரிக்கையாகும்.

இவ்வாண்டுக்கான காற்றாலை சீசன் மார்ச் 15-ல் துவங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் முழுவதும் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்காமல் 'Grid Curtailment' மொத்த மின் உற்பத்தியும் மின்வாரியம் எடுத்துக்கொண்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் காற்றாலை மூலம் மிக அதிக அளவு மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் மின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தைத் தடையின்றி வினியோகிக்கக் காற்றாலைகள் உதவும்.

இவ்வாறு கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...