கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில்‌ வளர்ச்சித்திட்ட பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு.!!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில்‌ வளர்ச்சித்திட்ட பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ TURIF திட்டத்தின்‌ கீழ்‌ வார்டு எண்‌.43-க்குட்பட்ட கே.கே.புதூர்‌ சாலை, புவனேஸ்வரி நகரில்‌ 298 மீட்டர் தொலைவிற்கு ரூ.43.50 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌.34க்குட்பட்ட எஸ்‌.பி.நகர் பேஸ்‌-2 பகுதியில்‌ 954 மீட்ட தொலைவிற்கு 1.86 கோடி மதிப்பீட்டில்‌, வார்டு எண்‌.36க்குட்பட்ட நியூதில்லை நகரில்‌ 440 மீட்டர்‌ தொலைவிற்கு ரூ.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ சாலை பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மேற்கு மண்டலத்தில்‌ வார்டு எண்‌.43-க்குட்பட்ட கே.கே.புதூார்‌ சாலை, புவனேஸ்வரி நகா்‌, 38வது வார்டுக்குட்பட்ட மருதமலை அடிவாரத்திலும்‌, வார்டு எண்‌.40க்குட்பட்ட வீரகேரளம்‌ பகுதியிலும்‌ மற்றும்‌ 75வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம்‌ பகுதியிலும்‌ தலா ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நல்வாழ்வு மையம்‌கட்டடப்பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர்‌ இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ பி.மல்லிகா, மாலதி, பத்மாவதி, அங்குலட்சுமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஷஹோமலதா, உதவி பொறியாளர்‌ திருமூர்த்தி மற்றும்‌ மாநரகாட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...