கோவை ரயில்நிலைய வளாகத்தில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து - உடனடியாக அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு…!

முதல்கட்ட விசாரணையில் சமையல் அறையிலிருந்த வடை சுடத் தயாராக வைத்திருந்த எண்ணெய்யில் தீப்பிடித்து எரிந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்தது தெரியவந்தது.



கோவை: கோவை ரயில்நிலையம் வளாகத்தில் உள்ள தனியார் உணவகத்தில் திடீரென ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்புத் துறை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



கோவை ரயில்நிலையம் வழியாகக் கேரளா, பெங்களூர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.



இந்நிலையில் கோவை ரயில்நிலைய வளாகத்தில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் சமையல் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.



இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் சமையல் அறையிலிருந்த வடை சுடத் தயாராக வைத்திருந்த எண்ணெய்யில் தீப்பிடித்து எரிந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்தது தெரியவந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...