மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை மோடி அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: மத்திய அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்தம் போராட்டத்தால், கோவை மாவட்டத்தில் சுமார் 80 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்குவிற்பனை செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
இதில், கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள், காப்பீட்டு துறை ஊழியர்கள், மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு வேலை நிறுத்த போராட்டத்தால் உக்கடம், சுங்கம், கவுண்டம்பாளைம், பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து
பணிமனைகளிலும் இருந்து பேருந்துகள் வெளியே செல்லாததால் சுமார் 80 சதவீதம் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை, இதனால் 20 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதே போல், கோவை மாவட்டத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கத்தினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதே போல், இன்று கோவை தெற்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய தபால் அலுவலகங்கள், காந்தி சிலை மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்கள் பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதே போல், இன்று கோவையில் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.