ஹிஜாப் விவகாரம்: 30-அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியினர்..!

பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசைக் கண்டித்தும் உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.

கர்நாடக மாநில அரசுக் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை பிறப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் கூறியது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய மக்கள், உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை உக்கடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.



இந்நிலையில் இந்த மாநாட்டிற்குக் கலந்து கொள்ள வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மற்றும் இஸ்லாமியப் பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், உக்கடம் ஜி.எம் நகரிலிருந்து உக்கடம் வள்ளியம்மை பேக்கரி வரை பேரணியாக வந்தனர்.



இந்த பேரணியில் சுமார் 30-அடி நீளமுள்ள தேசியக் கொடியினை ஏந்தியவாறும் ஹிஜாப்பிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியவாறும் பங்கேற்றனர்.



மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசைக் கண்டித்தும் உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...