தொழில்துறையினரின் கூட்டு முயற்சி காரணமாகக் கனவு திட்டமான இந்த தொழில் பூங்கா சிறப்பான முறையில் விரைவில் செயல்படத் துவங்க உள்ளது தொழில்துறையினர் அனைவரின் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாகக் கோவை நகருக்குள் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவும் புதிய உற்பத்தி தொழிற்சாலைகளைத் துவங்கவும் முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக தொழில்துறையினர் ஒன்றிணைந்து நகருக்கு வெளிப்புறங்களில் இடங்களை வாங்கி அங்கே தனியார் தொழிற்பேட்டைகளை அமைத்து வருகின்றனர். இந்த வகையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கமான(COSIEMA) தொழில் அமைப்பு சார்பில், கிணத்துக்கடவு அருகே சொளவம்பாளையம் கிராமத்தில் 'COSIEMA இண்டஸ்ட்ரியல் பார்க்' என்ற பெயரில் தொழில் பூங்கா ஒன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்பேட்டையில் அக்டோபர் முதல் தொழில் நிறுவனங்கள் செயல்படத் துவங்கும் என அதன் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
'COSIEMA தொழிற்பூங்கா' செயல் இயக்குனர் சுருளிவேல் மற்றும் இயக்குனர், நல்லதம்பி ஆகியோர் கூறியதாவது:-
நகர விரிவாக்கம் காரணமாக இட நெருக்கடி பிரச்சினை தொழில் துறையினருக்குப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தொழில்துறையினர் 78 பேர் ஒன்றிணைந்து கிணத்துக்கடவு அருகே சொளவம்பாளையம் கிராமத்தில் தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்தோம்.
முதல் கட்டமாக 42 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். மொத்தம் 140 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த தொழிற்பூங்கா திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளோம்.
உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதியைப் பெறுவதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். தற்பொழுது அந்த அனுமதி கிடைத்துவிட்டது. இறுதியான ஒரு அனுமதியும் அடுத்த வாரத்தில் கிடைத்துவிடும். எனவே ஆறு மாதங்களில் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில் நிறுவனங்கள் படிப்படியாக உற்பத்தியைத் துவங்குவார்கள்.
தொழிற்பேட்டை வளாகம் முழுவதும் 100% தொழில் நிறுவனங்கள் செயல்படத் துவங்கினால், 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிற்பேட்டை வளாகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை விரைவாகத் துவங்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிற்பேட்டை வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவும் அரசு உதவ வேண்டும்.
தொழில்துறையினரின் கூட்டு முயற்சி காரணமாகக் கனவு திட்டமான இந்த தொழில் பூங்கா சிறப்பான முறையில் விரைவில் செயல்படத் துவங்க உள்ளது தொழில்துறையினர் அனைவரின் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.