பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருகிறார்கள் என்பது உண்மையா? நிபுணர்கள் கூறும் காரணம் என்ன?

இதுகுறித்து பல்லடம் பிராய்லர் கமிட்டி, பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.


கோவை: பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என பிராய்லர் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். சிக்கனில், நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் அடிக்கடி எழுப்பட்டுகின்றன.

நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவற்றை பற்றி பல செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன. பிராய்லர் கோழி என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கோழி இனம் என்பதால், அதனால், பெண்கள் இளம் வயதிலேயே பூப்பெய்திவிடுகின்றனர் என கூறப்படுகிறது.

ஒரு ஆண் பிராய்லர் சேவல் மூலம் பெண் பிராய்லர் கோழி இணவைதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை செயற்கையாக கருத்தரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தி மிக குறைந்த நாளில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை ஆகும்.

இவை நல்ல சதைப் பற்றுடன் இருக்க, ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது. பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருவது என்பது உண்மைக்கு புறம்பானது என்று பிராய்லர் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் பிராய்லர் கமிட்டி, பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளில் பிராய்லர் கோழியில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும், மருத்துவர்கள், உணவு நிபுணர்கள், சமையல் வல்லுனர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தொடர்ந்து வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கமிட்டி செயலாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-



- உடலுக்கு புரதம் கொடுக்கும் உணவாக பிராய்லர் கோழி உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த தொழிலில் உள்ளனர்.

- மக்காச்சோளம் மற்றும் சோளம் விவசாயிகளும் இந்த தொழிலால் பயன்பெற்று வருகின்றனர்.

- கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம் போல் பல நகரங்களிலும், கருத்தரங்கங்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

- பிராய்லர் கோழி விலை குறைய வாய்ப்பில்லை. இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடுபொருட்கள் விலை குறைந்தால் தான் கோழி விலை குறையும்.

- பிராய்லர் கோழி குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்.

- கோழிக்கு ஊசி போட்டு வளர்ப்பது என்பது தவறு. உயிர் காக்கும் தடுப்பூசி மட்டும் தான் செலுத்தப்படுகிறது.

- வளர்ச்சி ஊக்கிகள் கொடுப்பது சட்ட விரோதம், அப்படியாக மருந்துகள் எதுவும் கொடுப்பது அவசியம் இல்லை.

- முழுக்க அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறோம்.

- பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருவது உள்ளிட்ட பல பொய்யான காரணங்களை கூறுகின்றனர்.

இது முற்றிலும் தவறு என்று மருத்துவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...