காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடக் கூடாது- எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்..!!

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் இருப்பதால் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எந்த மொழியிலும் திரையிடக்கூடாது என தெரிவித்தார்.


கோவை: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடக் கூடாது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற உள்ள ஹிஜாப் மாநாட்டிற்கு வருகை தந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் இருப்பதால் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எந்த மொழியிலும் திரையிடக்கூடாது.

மேலும் இத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுமானால் திரையரங்குகளை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி மிகப் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டது.

முஸ்லீம் முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஐஐடி கல்வி நிலையத்தில் மத, சாதிய வெறுப்பைக் களையக் குழு அமைக்க வேண்டும். 38-முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளலூர்‌ தேர்தல் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டிருப்பதாகவும் இவ்விவகாரத்தையும் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலை நேர்மையாக நடத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற ஜனநாயக மாண்பின் மீறி நடத்தப்படும் தேர்தல்களில் குதிரை நேரத்திற்கு மட்டுமே வழிவகுக்கும் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...