நாளை நடைபெறும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - சுமார் 30-ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்….!

மத்திய அரசைக் கண்டித்து நாளை நடைபெறும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30-ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


கோவை: அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் நாளை (மார்ச். 28 - 29) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் நாளை (மார்ச். 28 - 29) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி, உள்ளிட்ட வங்கிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்கள் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருந்தாலும், தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...