கணியூரில் களைகட்டிய ரேக்ளா பந்தயம்: சீறிப்பாய்ந்த காளைகள்- பொதுமக்கள் உற்சாகம்.!!

இந்த ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திரண்டு நின்று போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள கணியூர் கிராமத்தில் ரேக்ளா கிளப், மற்றும் கே.பி.ஆர் கல்வி குழுமத்தின் சார்பில் காளையர் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.



நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயத்தில் இயற்கை உரப் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் ஆகியவற்றுக்காக, 3-வது ஆண்டாக நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, மயிலை, காரி, செவலை, மலையன், காங்கயன் இனக் காளைகள் பூட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திரண்டு நின்று போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.



அதே சமயம் கொரோனா பரவல் காரணமாகக் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே பந்தயத்தைக் காண அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...