அதிமுக வெற்றி பெற்றாலும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை-அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் மதியம் நடைபெற்ற மதிமுக தேர்தலின்போதும் திமுகவினர் மறைமுக தேர்தல் நடக்கக் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டினை கிழித்து எறிந்தனர். இதனையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அதிமுகவைச் சேர்ந்த மருதாசலம் தலைவராகவும் கணேஷ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வன்முறைக்குக் காரணமானவர்கள் எனக்கு ஒரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருதாசலத்தின் மகன் உட்பட 9-பேரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



இதனைக் கண்டித்துத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, வெள்ளலூர் நடைபெற்ற பேரூராட்சி மறைமுகத் தலைவர் தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வில்லை. திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டு கொலைவெறி ஆயுதங்களுடன் காவல்துறையைத் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த 9-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று இரண்டு பெண்களைக் காவல் துறையினர் விடுவித்துள்ளனர்.

இது ஜனநாயகத்திற்குப் புறம்பாக உள்ளது. தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தை வெறுப்பு கண்ணோட்டத்தில் வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை எனவே அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வன்முறைச் சம்பவத்தை மறைக்கும் நோக்கில் அறப்போர் இயக்கத்தைக் கொண்டு வேண்டுமென்றே எஸ் பி வேலுமணி மீது ஊழல் புகார் உள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பை வைத்து இதனைத் திசைதிருப்பி உள்ளனர்.

அரப்போர் இயக்கம் முடிந்தால் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டுவர ஆய்வுகளை நடத்தட்டும், என தெரிவித்தார். மேலும் திமுக சேனாதிபதி அங்கு ஆயுதங்களுடன் இருந்தார் என்றும் அந்த வீடியோ ஆதாரமும் தங்களிடம் உள்ளது எனக் கூறிய அவர் அவரை தேர்தல் பார்வையாளர்களாக யாரேனும் நியமித்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...