கிணத்துக்கடவில் உள்ள அங்காளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா.!!

கிணத்துக்கடவு அண்ணா வீதியிலுள்ள அங்காளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


கோவை: கிணத்துக்கடவில் உள்ள அங்காளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா வீதியில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்தக் கோயிலில் 12-ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் விழா கடந்த 26-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

இது தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் முதல் கால யாக வேள்வி பூஜையும், தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் தீர்த்த குடங்கள் கோயிலின் கோபுரத்திற்கு மேளதாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.



இந்த கும்பாபிஷேக விழாவில் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...