தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் பள்ளி சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை கே.ஜி.சாவடி உப்புக்கண்டி தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற முயன்ற பள்ளிச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை கே.ஜி சாவடி அடுத்த அய்யம்பதி சின்னையா கவுண்டன்புதூர் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு கார்த்திக் (16) மணிகண்டன் (14) என்ற 2-மகன்கள் உள்ளனர்.
ஐயப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், இரண்டு மகன்களையும் தாய் ராஜேஸ்வரி வளர்த்து வருகிறார். கார்த்திக் மாவூத்தம்பதி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக்குமார், மணிகண்டன் இருவரும் கே.ஜி சாவடி உப்புகண்டி ஆறுச்சாமி கவுண்டர் தோட்டம் அருகே ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது ஒரு ஆடு மட்டும் அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்தாக தெரிகிறது.
இதையடுத்து கார்த்திக்குமார், மணிகண்டன் இருவரும் கிணற்றுக்குள் குதித்து ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றியுள்ளனர். அப்போது கார்த்திக்குமார் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து வெளியே வந்த மணிகண்டன் அங்கிருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு வந்த பகுதி மக்கள், கிணற்றின் உள்ளே குதித்து கார்த்திக்குமார் உடலைச் சடலமாக மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் கார்த்திக் குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.