கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவராக திமுக உறுப்பினர் கோகிலா தேர்வு..!

திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவராக திமுக உறுப்பினர் கோகிலா தேர்வு செய்யப்பட்டார்.

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் திமுகவும், 7 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. கடந்த மார்ச் 4ம் தேதி நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் கவிதா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கோகிலா என்பவரும், அதிமுக சார்பில் கலைவாணி என்பவரும் போட்டியிட்டனர். இதில் திமுக கவுன்சிலர் ஒருவரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தலா 7 வாக்குகள் பெற்பெற்றனர்.

இதையடுத்து, குலுக்கல் முறையில் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வாக்குச் சீட்டுக்களை கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர்.



இந்நிலையில், திருமலையம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கோகிலா என்பவர் 8 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக வேட்பாளர் கலைவாணி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து திமுகவினர் திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...