கோவை மாநகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்தான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை, போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில், தலைகவசம் அணிவது குறித்தான இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை மாநகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்தான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை, போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். கோவை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் இருந்து இந்த வாகன பேரணியானது துவங்கியது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவிழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவை மாநகர பெண் காவலர்கள், தனியார் அமைப்புகளின் பெண்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் கட்டாயம் வாகனம் ஓட்டும் போது தலை கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இந்த பேரணியானது, காமராஜர் ரோடு, திருவேங்கடசாமி ரோடு, ஆர்.எஸ் புரம், லாலி ரோடு ஆகிய சந்திப்பு வழியாக சென்று பின்னர் அரசு பொறியியல் கல்லூரியை வந்தடைந்தது.