கோவை வால்பாறை அருகே 8 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை..!

மேலும், சில காலங்களாக வன விலங்கு இறப்பு அதிகரித்து வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


கோவை: கோவை வால்பாறை அருகே 8 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், கரடி, சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகள் உள்ளது.

வால்பாறை அருகே ஸ்டான் மோர் எஸ்டேட் பகுதியில் 21வது தேயிலைத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் இறந்து உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் சிறுத்தையின் உடலை உடல் கூறாய்வு செய்தனர்.

சிறுத்தைக்கு சுமார் எட்டு வயதிலிருந்து 10 வயது இருக்கும் என்றும், பெண் சிறுத்தை என்றும் வயது முதிர்ந்த நிலை காரணமாக இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

பின்பு, வனத்துறை வன விலங்கு மனித மோதல் தடுப்பு குழு மையத்தில் சிறுத்தையின் உடலை தீ வைத்து எரித்தனர். சில காலங்களாக வன விலங்கு இறப்பு அதிகரித்து வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...