இந்த ரயில் ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
கோவை: கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலானது ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ரத்னகிரி, மட்கோன், கண்ணூர், சொர்ணுர், பாலக்காடு வழியாக 3வது நாள் மதியம் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.
இதே போன்று, கோவையில் இருந்து ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை திங்கள் கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, சொரனூர், கண்ணூர், மட்கோன், ரத்னகிரி வழியாக 3வது நாள் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரை சென்றடைகிறது.
இந்த ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டி ஒன்று, ஏ.சி இரண்டடுக்கு பெட்டி 2, ஏ.சி மூன்றடுக்கு பெட்டி 5, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி 11, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டி 2 என இயக்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கி உள்ளது.