இந்த சிறப்பு நூலகம், இரத்தினவேல் சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மகளிருக்காக திறந்து வைக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியில் மகளிருக்கான சிறப்பு நூலகம் இரத்தினவேல் சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மகளிருக்காக திறந்து வைக்கப்பட்டது.
சூலூர் இரத்னவேல் சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிட்டு செயல்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, மகளிர் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவத்தூர் கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ராவத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் மகளிருக்காக மகளிரால் நடத்தப்படும் சிறப்பு நூலகம் இன்று திறக்கப்பட்டது. முனைவர் இரா. உலகி, மண்டல இணை இயக்குநர், கல்லூரிக்கல்வி, கோயம்புத்தூர் நூலகத்தைத் திறந்து வைத்தார்.

அதோடு நாட்டு நலப்பணித்திட்ட ஏழுநாள் சிறப்பு முகாமின் தொடக்கவிழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி செயலர் சாரம்மா சாமுவேல், முதல்வர் முனைவர் த. சிவக்குமார், துணை முதல்வர் முனைவர் எம். பி ஐயப்பதாஸ், மாணவர் மன்ற இயக்குநர் முனைவர் ஆர்.என் விவேகானந்தர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.