ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம்: வாளையாறு ரயில்வே தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி.

யானை நடமாட்டம் குறித்த தகவல்களை எவ்வாறு அனுப்ப வேண்டும், புதிதாக செல்போன் ஆப் மூலம் தகவல்களை பரிமாறுவது குறித்து 19 வன ஊழியர்களுக்கு WWF  விலங்கு நல அமைப்பு, சார்பாக ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கேரளா- கோவை இடையே உள்ள வாளையாறு முதல் மதுக்கரை இடையேயான ரயில்வே தண்டவாளத்தில், ரயில் மோதி தொடர்ந்து யானைகள் இறந்து வருவதை தடுக்கும் பொருட்டு,பாலக்காடு ரயில்வே கோட்டம் மற்றும் கோவை வனத்துறை இணைந்து பல்வேறு வாய்மொழி ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர்.



அதன்படி, வாளையார் பகுதியிலுள்ள ஏ, மற்றும் பி லைன்களில், ரயில் கடக்கும்போது 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அதே போல், தண்டவாள ஒரத்தில் யானை நிற்பதை முட்புதர்கள் மறைப்பதால், ரயில்வே தண்டவாள ஓரத்தில் உள்ள செடிகள் அகற்றப்பட்டுள்ளது. 



மேலும், மதுக்கரை வனச்சரகதிற்கு உட்பட்ட வாளையார், சோலக்கரையில் 19 ரயில்பாதை கண்காணிப்பாளர்கள் வனத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யானை நடமாட்டம் குறித்து ரயில்வே துறைக்கும், ரயில் வரும் நேரத்தில் அங்கு யானை வருகிறதா என்பது குறித்தும் கண்காணிக்க உள்ளனர். மேலும், யானை வரும் போது ஒலியெழுப்பி ரயில் பாதைகள் அருகே யானைகள் வருவதை தவிர்க்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர். 



இந்த பணியில் ஈடுபடும்19 ஊழியர்களுக்கு WWFவிலங்கு நல அமைப்பு, சார்பாக ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. சோலக்கரை அருகே நடைபெற்ற இந்த பயிற்சியில்,19 கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். யானை நடமாட்டம் குறித்த தகவல்களை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும், புதிதாக செல்போன் ஆப் மூலம் தகவல்களை பரிமாறுவது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 

மேலும், ரயில்வே தண்டவாளம் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் யானை நடமாட்டம் கண்டறிந்து குறுஞ்செய்திகள் மூலமாக ரயில்வே பைலட்டுக்கு தகவல்கள் அளிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...