கோவை மாநகராட்சியில் ரூ. 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார மையங்கள்  - அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்…!

கோவை மாநகராட்சியில் ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய மைய கட்டிட பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய மற்றும் ஆய்வக மைய கட்டிட பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

கோவைக்கு தமிழக முதல்வரிடம் சிறப்பு நிதி பெற்று பல்வேறு பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு பீளமேடு பயனீர் சாலையில் ரூபாய். 22 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக மையம் கட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தாவர்.



தொடர்ந்து, 28 வது வார்டு ஜெயில் ரோடு, இளங்கோ நகர், விளாங்குறிச்சி, வெள்ளக்கிணறு விசுவாசபுரம், சின்னவேடம்பட்டி, அப்பநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், அன்னை சத்யா நகர் ஆகிய. பகுதிகளில் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தும், தொடர்ந்து முத்தண்ண குளத்தில் தார்சாலை புதுப்பித்தல் பணியை, அமைச்சர் துவக்கி வைத்தார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில், "தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வார்டுகளில் ரூ 9.12 கோடி மதிப்பீட்டிலான பூமி பூஜைகளையும், முடிந்த பணிகளையும் துவக்கி வைத்துள்ளேன்.

கோவை மாநகராட்சி தமிழ்நாடு நிலையான நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழரூ. 34.93 கோடி மதிப்பீட்டில் 51.35 கிலோ மீட்டர் நீளத்திற்கு 205 எண்ணிக்கையிலான சாலை பணிகள் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. இதில், முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 6.07 கிலோமீட்டர் நீளத்திற்கு மதிப்பீடில் ரூபாய்8.18 கோடிக்கு 4 சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. 



இந்நிலையில், 2 ஆம் கட்டமாக இன்று 10.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய்7.14 கோடி மதிப்பீட்டில் 53 சாலை பணிகளை பூமி பூஜை போட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 7 இடங்களில் தலா ரூபாய்25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரோக்கிய மையம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 63 சுகாதார ஆரோக்கியமையம் கட்ட, ரூபாய். 16.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 

முதற்கட்டமாக 8 பணிகள் துவங்க ரூபாய். 1.97 கோடி மதிப்பீட்டில் என மொத்தமாக இன்று ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் 13 பூமி பூஜைகள் நடைபெற்றது", என்றார். 

இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், முன்னாள் எம்.பி நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...