திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோவில் திருவிழாவில் இஸ்லாமிய பெண் வார்டு கவுன்சிலர் பங்கேற்பு - பொதுமக்கள் வரவேற்பு..!

தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியில் உள்ள "ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில்" பொங்கல் திருவிழாவில் பங்கேற்பு.



திருப்பூர்: திருப்பூர் கரட்டாங்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் இஸ்லாமிய பெண் வார்டு கவுன்சிலர் பங்கேற்றதை பொதுமக்கள் வெகுவாக வரவேற்றனர்.

திருப்பூர் தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியில் அமைந்துள்ள "ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில்" பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக அன்னதானம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் MKM.பாலு, மற்றும் 56வது வார்டு பாஜக கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு கவுன்சிலர் பெனாசிர் பேகம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். திருப்பூர் மாநகர மாவட்ட இந்து அன்னையர் முன்னணி தலைவர் சித்ரா தினகரன் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.



இந்நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள் நாகராஜ், கன்னிமுத்து, தெய்வசிகாமணி, கேசவன், உள்பட விழா குழுவினரும் பலர் வருகை தந்த அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...