மேலும், குறைகளைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.
கோவை: கோவை 52வது வார்டு பகுதிகளை மாமன்ற உறுப்பினர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகர் 52வது வார்டு டி ஜெயவர்த்தனவேலு நகர், வேலப்பன் நாயுடு லேஅவுட், கொண்டசாமி நாயுடு லே அவுட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று இன்று சந்தித்தார்.

அப்போது, அங்குள்ள மக்களின் கோரிக்கைகளான பூங்கா பராமரிப்பு, புதிய தெருவிளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால்களை சீரமைத்தல், அனைத்துப் பகுதிகளிலும் கொசுப்புகை மருந்து தெளித்தல், புதிய மழைநீர் வடிகால்களை அமைத்தல், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனைக் கேட்டறிந்த 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.