26-வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை மனுக்களின் தொகுப்பினை கோவை மாநகராட்சி மேயரிடம் வழங்கினார்.!!

கோவை மாநகராட்சி மேயரிடம் பீளமேடு பகுதியில், உள்ள பல்வேறு கோரிக்கைகளை, உடனடியாக செய்து தரக்கோரி 26-வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை மனுக்களின் தொகுப்பினை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி பீளமேடு பகுதியில், உள்ள பல்வேறு கோரிக்கைகளை, உடனடியாக செய்து தரக்கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 26- வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை மனுக்களின் தொகுப்பினை வழங்கினார்.

கோவை மாநகராட்சி, 26-வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அப்பகுதி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியைச் சந்தித்து பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மனுக்களை ஒரே தொகுப்பாகக் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 26-வது வார்ரடு மாமன்ற உறுப்பினர் வழங்கினார்.

பீளமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், பகுதிகளில், தெருவிளக்கு இல்லை, இதனால் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றனர் எனவும், பயனீர் மில் சாலையில் உள்ள அங்கன்வாடி பள்ளியைச் சுற்றிலும் புதர் மண்டி, புழு பூச்சிகள் உள்ளன.

இவற்றை அப்புறப் படுத்த வேண்டும் என்றும், எல்லை தோட்டம் சாலையில், இஸ்லாமிய மக்கள் மசூதிக்கும், மயானத்திற்கும் செல்லும் வழியில், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்றும், சிஎம்சி காலனி பகுதியில், மின் மயானம், அருகில் உள்ள பொது கழிப்பிடத்தின் எண்ணிக்கை அதிகப்படுத்தி, மேற்கிந்திய முறையில், சரிபாதி வீதம் கட்டி தர வேண்டும் என்றும், பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வணிகவியல் ஆசிரியர் இதுவரை நியமிக்கவில்லை தற்காலிக ஆசிரியர் மட்டும் பணியாற்றி வருகின்றார் எனவே நிரந்தர ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை செய்துதர கோரி மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...