தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் ஏற்றுமதி மாநாடு மற்றும்‌ கண்காட்சியின்‌ தொடக்கவிழா.!!

இதில் விவசாயப்‌ பொருட்களான பாசுமதி அரிசி, பாசுமதி அல்லாத அரிசி, புதிய பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ போன்றவை முக்கிய பங்கு வகுக்கின்றன.



கோவை: ஏற்றுமதி மாநாடு மற்றும்‌ கண்காட்சியின்‌ தொடக்கவிழா, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 25.03.2022 அன்று இந்திய ஏற்றுமதி அமைப்பின்‌ கூட்டமைப்பு (FIEO) மற்றும்‌ வேளாண்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்‌ (CARDS), தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ (TNAU) ஏற்பாடு செய்யப்பட்டது.



சென்னை, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின்‌ மண்டல கூடுதல்‌ மேம்பாட்டு ஆணையர்‌ டாக்டர்‌. எம்‌.கே. சண்முகசுந்தரம்‌, இ.ஆ.ப., ஒரு நாட்டின்‌ ஏற்றுமதியே அதன்‌ பொருளாதாரத்தின்‌ ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறினார்‌. நடப்பு ஆண்டில்‌ இந்தியா 650 பில்லியின்‌ அமெரிக்க டாலர்‌ ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளது.

இதில்‌ விவசாயத்துறையின்‌ பங்களிப்பு 14% ஆகும்‌. ஏற்றுமதியில்‌ விவசாயப்‌ பொருட்களான பாசுமதி அரிசி, பாசுமதி அல்லாத அரிசி, புதிய பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ போன்றவை முக்கிய பங்கு வகுக்கின்றன. மேலும்‌, மாம்பழம்‌, வாழைப்பழம்‌, திராட்சை பேரிக்காய்‌ மஞ்சள்‌ போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின்‌ ஏற்றுமதிக்கும்‌ தமிழகத்தில்‌ அதிக வாய்ப்புள்ளதாகவும்‌ அவர்‌ கூறினார்‌. மேலும்‌ அவர்‌ மஞ்சளில்‌ உள்ள குர்குமின்‌ விகிதத்தை அதிகரிக்க ஆராய்ச்சி முயற்சிகள்‌ தேவை எனவும்‌ கூறினார்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளரும்‌, செயல்‌ துணைவேந்தருமான டாகடர்‌. ௮.சு. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகையில், ஏற்றுமதி சந்தையைக் கைப்பற்றத் தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த மாவட்டங்களில்‌ அதிக அளவில்‌ பயிரிடப்படுகிற வேளாண்‌ பொருட்களின்‌ உற்பத்தியில்‌ கவனம்‌ செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.‌



கோவை CGST இணை ஆணையர்‌ விஜயகிருஷ்ணவேலன் ஏற்றுமதி சார்ந்த விவசாயப்‌ பொருட்களின்‌ மதிப்புக்கூட்டல்‌ சங்கிலியில்‌ பெரும்‌ இடைவெளி இருப்பதாகக்‌ கூறினார்‌. மஞ்சளில்‌ மதிப்புகூட்டப்பட்ட பொருட்களின்‌ ஏற்றுமதியை அதிகரிக்க கிளஸ்டர்‌ அணுகுமுறை தேவை என்று கூறினார்‌. 94458 98686 என்ற அலைபேசி எண்ணின்‌ மூலம்‌ 24/7 ஏற்றுமதி வர்த்தக வசதிகள்‌ கிடைப்பது குறித்தும்‌ அவர்‌ தெரிவித்தார்‌.



இந்திய ஏற்றுமதி அமைப்பின்‌ கூட்டமைப்பு (தெற்கு) துணை இயக்குநர்‌ ஜெனரல்‌, கே. உன்னிகிருஷ்ணன்‌, கூட்டத்தை வரவேற்றார், மேலும்‌ மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின்‌ பங்களிப்பு 12%க்கும்‌ குறைவாகவே உள்ளன எனவே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின்‌ ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள்‌ இருக்கும்‌ என்றும்‌ சுட்டிக்காட்டினார்‌.



கோவை, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின்‌ இணை இயக்குனர்‌. டி.ஸ்ரீதர், ஐ.டி.எஸ்‌., வெளிநாட்டு வர்த்தகம்‌ குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, டிஜிஎஃப்டி வழங்கும்‌ சேவைகளைப்‌ பெறத் தமிழக விவசாயிகள்‌ முன்வர வேண்டுமென்று ஊக்குவித்துபேசினார்.‌

தொடக்கவிழாவை‌ தொடர்ந்து, தமிழ்நாட்டின்‌ மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின்‌ கண்காட்சியைச் சென்னை, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின்‌ மண்டல கூடுதல்‌ மேம்பாட்டு ஆணையர்‌ டாகடர்‌. எம்‌.கே. சண்முகசுந்தரம்‌, இ.ஆ.ப., திறந்து வைத்தார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ (TNAU), வேளாண்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின்‌ (CARDS), இயக்குநர்‌ முனைவர்‌ கே.ஆர்‌.அசோக் நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...