நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர்கள் மீது சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலைய பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையம் போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நள்ளிரவு நேரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (27) மற்றும் கிணத்துக்கடவு மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த சின்னசாமி (52) ஆகிய இருவர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.