கோவையில் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி.!!

இன்று ஒரு நாள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயிற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் போதைப்பொருள்கள் பயன்பாடு தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு (POSA- Prevention Of Substance Abuse Awareness Programme) ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணிவணிக பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறுகிறது.



இதில் POSA அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள் கோவை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பயிற்சி அளித்தனர்.



மேலும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களை எவ்வாறு மீட்கலாம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.



இன்று ஒரு நாள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயிற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஒரு வாரம் கழித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...