22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு உடனுக்குடன் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார்.
கோவை: 22-வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகம் காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
உடனடியாக தூய்மைப் பணியை மேற்கொள்ள கவுன்சிலர் கோவை பாபு உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இதேபோல் ஆசிரியர் காலனி பகுதியில் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக புதிய மின் கம்பம் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உடனுக்குடன் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.