கோவை மாநகராட்சியின் வரி வசூல் 60-சதவீதத்தில் இருந்து 80-சதவீதமாக உயர்வு.!!

வரி செலுத்தாதவர்களுக்கும், நீண்டநாள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கும் குடிநீர் துண்டிக்கப்பட்டு வருவதால், கடந்த மாதம் வரை 60-சதவீதத்திலிருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் வரி வசூல் 60-சதவீதத்தில் இருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் வரி வசூலைத் தீவிரப்படுத்த மண்டலத்துக்கு 5-பேர் வீதம் 25-பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் வருகின்ற 31-ஆம் தேதி வரை வரி வசூலிக்கும் பணியில் ஈடுப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் பிரதான வருவாய் குடிநீர் வரியிலிருந்தும் சொத்து வரியிலும் இருந்தே கிடைக்கின்றது. அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டின் நிதி ஆண்டு வருகிற 31-ஆம் தேதி முடியும் நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கையால் வரி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தது.

ஆகவே தற்போது அதனை விரைவுபடுத்தும் நோக்கில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வரி செலுத்த நினைவு படுத்த படுகிறது.

மேலும் வரி செலுத்தாதவர்களுக்கும், நீண்டநாள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கும் குடிநீர் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற நடவடிக்கையால் கடந்த மாதம் வரை 60- சதவீதத்திலிருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 7-நாட்களே உள்ள நிலையில் வரி வசூலை அதிகரிக்கும் நோக்கில் மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர்கள் என 5-மண்டலங்களுக்கு 25-நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...