கோவை தொழில் வளர்ச்சிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டியது மிக அவசியம் - தொழில்துறையினர் வலியுறுத்தல்..!

கேரளாவிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் போத்தனூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


கோவை: போத்தனூர் ரயில்வே நிலையத்தை மேம்படுத்தினால் எதிர்வரும் ஆண்டுகளில் கோவை தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனவும் இப்பணிகளை விரைவில் துவக்க வேண்டியது அவசியம் என தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழில் நகரான கோவை, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காஸ்டிங், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப்செட், இன்ஜினியரிங் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றது. தொழில்துறை மட்டுமின்றி கல்வி, சுற்றுலா, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என்பது உள்ளிட்ட பல்வேறு இதர துறைகளிலும் கோவை மாவட்டம் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

இத்தனை சிறப்புகள் கொண்டுள்ள போதும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப கோவையில் பிரதான ரயில்வே நிலையம் தவிர்த்து மற்ற ரயில்வே நிலையங்கள் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மேம்படுத்தப்படவில்லை.

கோவை ரயில்வே நிலையத்தை தினமும் 25 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் பிரதான ரயில்வே நிலையம் அமைந்துள்ள காரணத்தால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மக்கள் தொகை அதிகரித்து வரும் காரணத்தால் தொழில் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் புறநகர் பகுதிகளில் அதிகம் செயல்பட துவங்கியுள்ளன.

குறிப்பாக கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி உள்ளிட்ட போத்தனூர் ரயில்வே நிலைய சுற்றுப்புற பகுதிகளில் தொழில் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கேரளாவிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் போத்தனூர் ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ரயில்கள் போத்தனூர் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு போத்தனூர் ரயில் நிலையத்தை விரைவில் பிரதான ரயில் நிலையத்தை போலவே மேம்படுத்தி அனைத்து ரயில்களும் ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் புதிய ரயில்களை போத்தனூர் ரயில்வே நிலையம் வழியாக அறிமுகப்படுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, கொங்கு குளோபல் போரம்(KGF) இயக்குனர், டி. நந்தகுமார் கூறியதாவது:-



கோவை நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்துறை சார்ந்த வளர்ச்சி பணிகளில் போத்தனூர் ரயில் நிலையம் சுற்றுப்புற பகுதிகளில் அதிகம் முக்கியத்துவம் பெற துவங்கியுள்ளன. அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போத்தனூர் அருகே வெள்ளளூரில் கட்டப்பட்டு வருகிறது.

எனவே, எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு போத்தனூர் ரயில் நிலையத்தை விரைவில் மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே போத்தனூர் ரயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ரயில்வே துறை சம்பந்தப்பட்ட சிறந்த கட்டமைப்பு வசதி, இடவசதி, சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் பயிற்சி மையம் என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிதாக மேம்பாட்டுப் பணிகளை எளிதில் மேற்கொள்ளலாம்.

இதனால் எதிர்வரும் ஆண்டுகளில் கோவை ரயில் நிலையத்தில் நெரிசல் குறைவதுடன் தொழில் வளர்ச்சிக்கும் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கும் போத்தனூர் ரயில் நிலையம் மிக முக்கிய பங்களிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு டி. நந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...