திருப்பூர் நெரிப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, நகை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெரிப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து நகைகளை திரும்ப ஒப்படைக்கும் விழா நடந்தது.
இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:-
'சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம்' என்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உறுதிமொழி வழிநின்று நல்லாட்சி வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் தந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஏழை தாய்மார்கள் வாங்கிய நகைக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்ற உறுதிமொழியை ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றியுள்ளார்.
நெரிப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து நகைகளை திரும்ப ஒப்படைத்து தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், துணைமேயர் பாலசுப்பிரமணியம், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.