கோவை தொண்டாமுத்தூரில் அஸ்திவார சுவர் இடிந்து விழுந்து விபத்து - 4 வயது சிறுமி பரிதாபமாக பலி…!

மேலும், 7 வயது சிறுமி உடலில் கம்பி குத்திய காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே கட்டிட அதிஸ்வார சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 வயது சிறுமி பலி மற்றும் 7வயது சிறுமி ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் பாபு (49). இவருக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் தடாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி ஜோதி, பவித்ரா, முல்லை ஆகிய 4 பேர் ஈடுபட்டிருந்தனர். 

மேலும், அந்த நிலம் பள்ளத்தில் இருந்ததால் 4 அடி உயரத்திற்கு மேல் அஸ்திவாரம் போடப்பட்டு, அதற்குமேல் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 



இந்நிலையில், கட்டிட பணி நடந்தபோது அஸ்திவாரம் அருகே குழி தோண்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அதன் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்ட பணியாளரின் உறவினரான தங்கராஜ் என்பவரின் மகள் சன்சிகா (4) மற்றும் சந்துரு என்பவரின் மகள் தேவசேனா (7) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். 



அப்போது, திடீரென அஸ்திவாரத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் சன்சிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவசேனா கம்பி குத்திய காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆனால், உடல் நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...