மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்த இந்த பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நீர் சேமிப்பு தேவைகள் குறித்துத் தெரிவித்தனர்.
கோவை: கோவையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பேரணி நடைபெற்றது.
உலக தண்ணீர் தினம் மார்ச் 22 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அத்தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை வளம் காப்போம்! நீர்நிலைகளை பாதுகாப்போம்! என்ற தலைப்பில் பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியில் ஊரக வளர்ச்சி மகளிர் திட்டத்தின் பயிற்சி மாணவர்கள் மற்றும் மகளிர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு "நீர் என்பது இயற்கை ஆதாரம் அல்ல அதுதான் வாழ்க்கை, நீரின்றி நீயும் இல்லை நானும் இல்லை, தண்ணீர் சேமிப்பு என்பது பூமியின் பாதுகாப்பு, இன்றைய நீர் சேமிப்பு நாளைய பாதுகாப்பு" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியை சென்றடைந்தது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

அப்போது நீரைக்குறித்தும், நீர் சேமிப்பு தேவைகள் குறித்தும் மாணவர்கள் தெரிவித்தனர்.