அங்கு வசித்து வரும் பொதுமக்கள், சாலை வசதி, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
கோவை: கோவை மாநகராட்சி 21-வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் உள்ள பாரதியார் வீதி, விநாயகபுரம் குடியிருப்போர் மக்கள் சார்பாக அடிப்படை வசதிகள் செய்யக்கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி 21-வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் உள்ள பாரதியார் வீதி, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு வசித்து வரும் பொதுமக்கள், சாலை வசதி, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
21-வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம், மற்றும் அவரது கணவர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட மனுவில், கோவை சரவணம்பட்டியில் உள்ள பாரதியார் வீதி, விநாயகபுரம், வார்டு எண்.21-ல் வசித்து வருகிறோம்.
இந்த பகுதியில் சாக்கடை வசதிகள் இல்லாத நிலையிலும், ரோடுகள் பழுதடைந்த நிலையிலும் மற்றும் தெருவிளக்குகள் மிகவும் குறைவாகவும் உள்ளது. கடந்த ஆட்சியில் பல வருடங்களாக யாரும் மேம்படுத்த முன்வரவில்லை.
இதனால் மக்கள் மழை காலத்தில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. ஆகையினால் மேற்படி சாக்கடை, ரோடு, சீரான குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்தித் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.