ஐ.ஏ.எஸ் மாணவர்களுக்கான பயிற்சி முகாம்: மாணவர்களிடம் தான் கடந்து வந்த பாதை பற்றி பகிர்ந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர்.!!

மாவட்ட ஆட்சியர் அவர் கடந்து வந்த வாழ்க்கையையும், ஐ.ஏ.எஸ் பணி என்றால் என்ன என்பது குறித்தும் ஐ.ஏ.எஸ் ஆவதற்கு எவ்வாறு நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.



கோவை: கோவை அரசு கலை கல்லூரியில் இலவச ஐ.ஏ.எஸ் குறித்தான கருத்தரங்கு நடைபெற்றது. Free IAS Exam coaching Center and Department of Political Science நடத்திய இந்த கருத்தரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



இதில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சமீரன், நான் அரசு பள்ளியில் முழுவதும் படித்தேன். சிவில் சர்விஸில் செய்தித்தாள்கள் படிப்பது தான் முதல் படி.

யூ.பி.எஸ்.இ தேர்வு என்பது நம்முடைய நடவடிக்கையை மற்றும் சமூக புரிதலை மையமாகக் கொண்டது. நாம் எப்போது பலவற்றை கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அவர் கடந்து வந்த வாழ்க்கையையும், ஐ.ஏ.எஸ் பணி என்றால் என்ன என்பது குறித்தும் ஐ.ஏ.எஸ் ஆவதற்கு எவ்வாறு நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.



அவரிடம் சில மாணவர்கள் ஐ.ஏ.எஸ் குறித்தான கருத்துகளையும் சந்தேகங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகளுக்குப் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...