கூடைப்பந்து மைதானத்திற்கு அருகே பழைய பயன்படுத்தாத கழிவறை ஒன்று உள்ளது. அந்த கழிவறைகளின் கம்பியை வளைத்து, இரவு நேரங்களில் நுழைந்து இது போன்ற செயல்களில் ஈடுப்படுவதாக, விளையாட்டு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
கோவை: கோவைநேரு ஸ்டேடியம் எதிரில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானத்தில், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியின் இந்த மைதானத்தில் கபடி, வாலிபால், கூடைப்பந்து, பூப்பந்து, பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த மைதானத்தை அங்கு பயிற்சியளிக்கும் விளையாட்டு பயிற்சி சங்கங்கள் பராமரித்து வருகின்றனர்.
கபடி போட்டிகள், கூடைப்பந்து போட்டிகள், வாலிபால் போட்டிகள் போன்றவை நடப்பது மட்டுமின்றி தடகள போட்டிகள் தொடர்ந்து அந்த மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
மேலும் இம்மைதானத்தில் தினசரி காலையும் மாலையும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சிக்கு வருவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அங்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறை குவியல். பயன்படுத்தப்பட்டஆணுறைகள் குவிக்கப்பட்ட சம்பவம்,பெற்றோர்கள் மற்றும், பயிற்சியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதுகுறித்து விளையாட்டு பயிற்சியாளர்கள் கூறியதாவது:-
கூடைப்பந்து மைதானத்திற்கு அருகே பழைய பயன்படுத்தாத கழிவறை ஒன்று உள்ளது. அந்த கழிவறைகளின் கம்பியை வளைத்து, இரவு நேரங்களில் நுழைந்து இது போன்ற செயல்களில் ஈடுப்படுகின்றனர்.

தடுப்பு கம்பிகளைச் சரி செய்தாலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வருகிறது. ஆகவே, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல்இருக்க அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், இப்பகுதியில் காவலாளி ஒருவர் மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் எளிதாக, யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.