சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவினாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் ஆர் ஜி புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதைத் தடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் நெடுஞ்சாலை பகுதிகளில் மதுபானக்கடை வரக்கூடாது என்ற சட்டத்தை மீறி இந்த கடை திறக்கப் படுவதாகவும், இதனால் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும் எனவும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் மதுபான கடை அமைய உள்ள இடத்திற்கு எதிரில் சிவன் கோயில், ஐயப்பன் கோயில் அமைந்துள்ளதாகவும் எனவே அங்கு மதுபானக்கடை வருவதால் பக்தர்களின் மனதை பாதிக்கும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.