கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இன்று உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவை: காசநோய் பரவுதல் பற்றியும், நோயைத் தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும், மார்ச் 24-ல், சர்வதேச காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இன்று உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியைக் கோவை அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர் நிர்மலா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணியானது கலைக்கல்லூரி வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் காச நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், தடுப்பு வழிமுறைகள் குறித்தான பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100-க்கும் மேற்பட்டமருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வினையொட்டி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் தின விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது.